TNPSC Thervupettagam

கழுகுகள் மறு அறிமுகத் திட்டத்தில் பின்னடைவு

July 2 , 2026 9 hrs 0 min 25 0
  • தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம், எபநாடு அருகே மின்சாரக் கம்பியில் மோதியதில், ரேடியோ அலைக்கற்றை மூலம் கண்காணிக்கப்படும் வெண்முதுகுப் பாறுக்கழுகு ஒன்று மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தது.
  • காப்பகத்தில் வளர்க்கப்பட்ட இந்தப் பறவை, மறுஅறிமுகத் திட்டத்தின் ஒரு பகுதியாக 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முதுமலை புலிகள் காப்பகத்தில் விடுவிக்கப் பட்டது.
  • இந்தக் கழுகு முதுமலைக்கு மாற்றப் படுவதற்கு முன்பு, 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மகாராஷ்டிராவின் தடோபா-அந்தாரி புலிகள் காப்பகத்தில் விடுவிக்கப் பட்டிருந்தது.
  • வெண்முதுகுப் பாறு தெற்காசியாவிற்கு மட்டுமே உரித்தானது என்பதுடன் இது இயற்கைப் பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியத்தின் (IUCN) செந்நிறப் பட்டியலில் மிக அருகி வரும் இனம் எனப் பட்டியலிடப்பட்டுள்ளது என்பதோடு மேலும் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972 இன் அட்டவணை I-இன் கீழ் பாதுகாக்கப்படுகிறது.
  • கால்நடைகளுக்குப் பயன்படுத்தப்படும் டைக்ளோஃபெனாக் என்ற மருந்தினால் ஏற்பட்ட நச்சுத் தன்மை காரணமாக இதன் எண்ணிக்கை கடுமையாகச் சரிந்ததுதுடன் இம்மருந்து செலுத்தப்பட்ட கால்நடைகளின் உடல்களை உண்ணும் கழுகுகளுக்கு இது சிறுநீரகச் செயலிழப்பை ஏற்படுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்