TNPSC Thervupettagam

கவுகாத்தியில் ஆந்தை பன்முகத்தன்மை பாதுகாப்புத் திட்டம்

November 1 , 2026 8 days 105 0
  • 2023 ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை நடத்தப்பட்ட கணக்கெடுப்புகளின் போது, அசாமின் கவுகாத்தியில் எட்டு ஆந்தை இனங்களை ஓர் அறிவியல் ஆய்வு பதிவு செய்துள்ளது.
  • கணக்கெடுக்கப்பட்ட தலா ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட 33 கட்டங்களில் 24 கட்டங்களில் இந்த ஆய்வு ஆந்தைகளைப் பதிவு செய்துள்ளது.
  • களஞ்சிய ஆந்தை மற்றும் புள்ளி ஆந்தை ஆகியவை அடிக்கடி கண்டறியப்பட்ட இனங்களாகும்.
  • மற்ற ஆறு இனங்கள் பழுப்பு நிறப் பருந்து ஆந்தை, பழுப்பு நிற மீன் ஆந்தை, கழுத்துப்பட்டை கொண்ட சிறு ஆந்தை, மலை சார்ந்த சிறு ஆந்தை, கீழைச் சிறு ஆந்தை மற்றும் ஆசியக் கோடு ஆந்தை ஆகும்.
  • இந்த எட்டு இனங்களும் இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IUCN) செந்நிறப் பட்டியலில் தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் (LC) என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
  • ஆந்தைகள் ஸ்ட்ரிகோஃபார்ம்ஸ் வரிசையைச் சேர்ந்தவை, இதில் டைட்டோனிடே மற்றும் ஸ்ட்ரிகிடே என்ற இரண்டு வாழும் குடும்பங்கள் உள்ளன; அவை எலி பெருக்கத்தை இயற்கையாகவே கட்டுப்படுத்த உதவுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்