மத்திய அரசானது, நக்சல் அமைப்புகளை அழிப்பதற்கும், மாவோயிசத்தின் அரசியல் சித்தாந்தத்தை அகற்றவும் 2024 ஆம் ஆண்டில் காகர் என்ற ஒரு நடவடிக்கையினைத் தொடங்கியது.
2025 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் சத்தீஸ்கரில் சுமார் 140க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர்.
2026 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்குள் நக்சல்களை ஒழிக்க இலக்கு நிர்ணயித்து, நக்சல் அமைப்புகள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதை நோக்கி மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கரைப் பிரிக்கும் மலைத்தொடர் 'கரேகுட்டா' மற்றும் 'பிளாக் ஹில்ஸ்' ஆகும்.
5000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள வசிக்க முடியாத இந்த மலைகள் ஆனது, மிகவும் பெரும்பாலான உள்ளூர் மக்களால் கூட அணுக முடியாததாகவே உள்ளன.
மாவோயிஸ்டுகள் ஒரு காலத்தில் இங்கிருந்து தான் அவர்களின் நடவடிக்கைகளைத் தொடர்ந்ததாகக் கருதப்படுகிறது.
சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா, மகாராஷ்டிரா மற்றும் பீகார் உள்ளிட்ட பல இந்திய மாநிலங்களின் சில பகுதிகளை உள்ளடக்கிய "சிவப்பு வழித் தடம் (Red Corridor)" நக்சல் இயக்கம் மிகவும் தீவிரமாக செயல்பாட்டில் உள்ளது.