February 10 , 2020
1930 days
791
- குடியரசுத் தலைவரின் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பதிலளித்த பிரதமர் மோடி கவிஞர் காகா ஹத்ராசியின் கருத்தை மேற்கோள் காட்டினார்.
- காகா ஹத்ராசி என்பவர் இந்தி மொழியில் இந்தியாவின் சிறந்த நையாண்டி மற்றும் நகைச்சுவைக் கவிஞர் ஆவார்.
- இவருக்கு 1985 ஆம் ஆண்டில் இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியது.
- நகைச்சுவையைத் தவிர, பாரம்பரிய நடனம் மற்றும் இசை குறித்தும் ‘வசந்த்’ என்ற புனைப் பெயரில் அவர் எழுதியுள்ளார்.
- டெல்லியை தளமாகக் கொண்ட இந்தி அகாடமி இலக்கியத் துறையில் சிறப்பான பங்களிப்பு ஆற்றுவோருக்கு ஆண்டுதோறும் காகா ஹத்ராசி விருதை வழங்குகின்றது.
- இவர் 1935 ஆம் ஆண்டில் சங்கீத் என்ற மாத இதழை வெளியிடத் தொடங்கினார்.
- சங்கீத் ஆனது இந்தியப் பாரம்பரிய இசை மற்றும் நடனம் குறித்த ஒரே பத்திரிக்கை ஆகும்.

Post Views:
791