காங்கோவில் எபோலா நோய் பாதிப்பு - சர்வதேச அவசர நிலை
July 19 , 2019 2306 days 878 0
உலக சுகாதார அமைப்பானது (WHO - World Health Organisation) காங்கோ மக்களாட்சிக் குடியரசில் பரவி வரும் எபோலா நோயினைச் சர்வதேச அளவில் பொதுச் சுகாதார அவசர நிலையாக அறிவித்துள்ளது.
WHO ஆனது சர்வதேச “அவசர நிலையை” மற்ற நாடுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்ற மற்றும் ஒருங்கிணைந்த சர்வதேச மீட்புப் பணி தேவைப்படுகின்ற ஒரு “அசாதாரண நிகழ்வு” என்று வரையறுக்கின்றது.
இது போன்ற ஒரு அறிவிப்பானது சர்வதேச ஈர்ப்பையும் நிதியையும் கொண்டு வரும்.
வரலாற்றில் இது போன்ற வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் 5-வது அறிவிப்பு இதுவாகும்.
இதற்கு முந்தைய அவரச நிலை அறிவிப்புகள் பின்வருமாறு : அமெரிக்காவில் ஏற்பட்ட ஜிக்கா நோய், பன்றிக் காய்ச்சல், போலியோ ஒழிப்பு மற்றும் 2014-16ல் மேற்கு ஆப்பிரிக்காவில் பரவிய எபோலா நோய்.