காங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள மை-நோம்பே ஏரி மற்றும் தும்பா ஏரி ஆகியவை அருகிலுள்ள மக்கு நிலங்களில் (Peatland) சேமிக்கப்பட்ட பண்டைய கார்பனை வெளியிடுகின்றன.
இந்த ஏரிகளில் இருந்து வெளியாகும் கார்பன் டை ஆக்சைடில் சுமார் 40% 3,000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான கரியிலிருந்து வருவதாக ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.
மக்கு நிலங்கள் என்பது நீர் தேங்கிய பகுதிகள் ஆகும் என்பதோடு அவை இறந்த தாவரங்களிலிருந்து அதிக அளவு கார்பனைச் சேமித்து வைக்கின்றன.
உலகின் வெப்பமண்டல மக்கு நில கார்பனில் மூன்றில் ஒரு பங்கை காங்கோ படுகை சேமித்து வைக்கிறது.
காலநிலை மாற்றம் மற்றும் காடழிப்பு ஆகியவை வளிமண்டலத்தில் சேமிக்கப்பட்ட கார்பனின் வெளியீட்டை அதிகரிக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.