TNPSC Thervupettagam

காசநோய்ப் பாதிப்புகளை மதிப்பிடுவதற்கான இந்திய அளவிலான மாதிரி

April 14 , 2023 844 days 344 0
  • காசநோய்ப் பாதிப்புகளின் பரவலைக் கண்டறிவதற்காக அதிநவீனக் கணிதமுறை மாதிரியை உருவாக்கிய உலகின் முதல் நாடாக இந்தியா மாறியுள்ளது.
  • இது நோயின் இயல்பு சார்ந்த வரலாறு, தனிப்பட்ட நோய்த் தொற்றுப் பாதிப்புகள், உடல்நலம் பேணும் நடத்தை, தவறிய அல்லது முறையான நோயறிதல், சிகிச்சை வழங்கீடு மற்றும் விளைவு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது.
  • உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டின் படி, 2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் காச நோய்ப் பாதிப்பு விகிதம் (10,000 நபர்களுக்கு) ஆனது 210 ஆக இருந்தது.
  • இந்தியக் கணிதமுறை மாதிரியைப் பயன்படுத்தி, இது 2022 ஆம் ஆண்டில் 196 ஆக உள்ளதாக மதிப்பிடப்பட்டது.
  • 2021 ஆம் ஆண்டில் காசநோய்ப் பாதிப்புகளின் முழு எண்ணிக்கை 29.50 லட்சமாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டுள்ளது.
  • இந்திய மாதிரியானது, இது 2022 ஆம் ஆண்டில் 27.70 இலட்சம்  என்று குறிப்பிட்டது.
  • உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, 2021 ஆம் ஆண்டில் காசநோய் இறப்பு விகிதம் (10,000 நபர்களுக்கு) 35 என மதிப்பிடப்பட்ட நிலையில் இது இந்திய மாதிரியின் படி 2022 ஆம் ஆண்டில் 23 ஆகக் குறைந்துள்ளது.
  • உலக சுகாதார அமைப்பானது, 2021 ஆம் ஆண்டில் காசநோய் இறப்புகளின் முழு எண்ணிக்கை 4.94 லட்சமாக இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது.
  • இந்திய மாதிரியானது, 2022 ஆம் ஆண்டில் இது 3.20 லட்சம் என குறிப்பிட்டது.
  • 2022 ஆம் ஆண்டில், மொத்தம் 23,58,664 நோயாளிகள் மருந்து எதிர்ப்புத் திறன் கொண்ட காச நோயினால் (DSTB) பாதிக்கப் பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டனர்.
  • 2022 ஆம் ஆண்டில், பதிவு செய்யப்பட்டப் பாதிப்புகளில், சிகிச்சைத் தொடக்க விகிதம் 95.5 சதவீதமாக இருந்தது.
  • இந்திய மாநிலங்களிலேயே அதிகப் பாதிப்புப் பதிவு விகிதம் டெல்லியில் பதிவாகி உள்ளது (ஒரு லட்சம் பேருக்கு 546).
  • இந்திய மாநிலங்களிலேயே மிகக் குறைவான பாதிப்பு கேரளா மாநிலத்தில் பதிவாகி உள்ளது (ஒரு லட்சம் பேருக்கு 67).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்