TNPSC Thervupettagam

காசநோய் இறப்பில்லாத் திட்டம் (TN-KET)

July 10 , 2025 2 days 54 0
  • காசநோய் (TB) உயிரிழப்புகளுக்கான ஒரு முன்கணிப்பு மாதிரியை அதன் காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் ஒருங்கிணைத்த இந்தியாவின் முதல் மாநிலமாக தமிழ்நாடு மாறி உள்ளது.
  • இந்த மாதிரியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையின் தேசியத் தொற்றுநோயியல் நிறுவனம் (ICMR-NIE) உருவாக்கியுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டு ஜூலை மற்றும் 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதங்களுக்கு இடையில் அரசு நடத்தும் மையங்களில் சிகிச்சைப் பெற்ற 56,000 காசநோய் நோயாளிகளிடம் இருந்து பெற்ற தரவைப் பயன்படுத்தியது.
  • மிகவும் கடுமையாக நோய் வாய்ப்பட்ட காசநோய் நோயாளிகளை முன்கூட்டியே கண்டறிந்து, அவர்களின் மருத்துவமனை அனுமதியை மிகவும் விரைவுபடுத்தி, இந்த உயிரிழப்புகளைக் குறைக்க உடனடி சிகிச்சையைத் தொடங்குவதே இதன் பெரும் குறிக்கோள் ஆகும்.
  • இந்தப் புதிய அமைப்பானது மாநிலத்தின் காசநோய் சேவை (கடுமையான காசநோய் வலையமைப்புச் செயலி) கட்டமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
  • இது தமிழ்நாடு காசநோய் இறப்பில்லாத் திட்டம் (TN-KET) மருத்துவ நலச் சேவை என்ற முன்னெடுப்பின் கீழ் பயன்படுத்தப்படும்.
  • இச்செயலியானது மிகக் குறைந்த உடல் எடை, நிற்க இயலாமை அல்லது HIV (மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸ்) பாதிப்புடன் சேர்த்து இணைத் தொற்று போன்ற ஆபத்துக் காரணிகளின் அடிப்படையில் நோயாளிகளைக் குறியிடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்