பல ஆண்டு கால விசாரணைக்குப் பிறகு, இஸ்ரேலிய அதிகாரிகள் காசாவில் இனப் படுகொலை செய்துள்ளதாக ஐ.நா. விசாரணை ஆணையம் முடிவு செய்தது.
மனித உரிமை அமைப்புகள் மற்றும் இனப்படுகொலை குறித்த அறிஞர்களின் நீண்ட காலக் குற்றச்சாட்டுகளையும் இது உறுதிப்படுத்துகிறது.
ஐந்து இனப்படுகொலைச் செயல்களில் பின்வரும் நான்கிற்கு ஆணையம் "நியாயமான காரணங்களை" கண்டறிந்தது:
ஒரு சமூகத்தின் உறுப்பினர்களைக் கொல்வது,
கடுமையான உடல் மற்றும் மன ரீதியான தீங்கு விளைவிப்பது,
ஒரு குழுவை அழிப்பதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகள், மற்றும்
அக்குழுவில் பிறப்புகளைத் தடுப்பது.
காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக ஒரு இனப்படுகொலைப் பிரச்சாரத்தை ஏற்பாடு செய்ததற்கான பொறுப்பினை உயர் நிலை இஸ்ரேலிய அதிகாரிகள் ஏற்க வேண்டும் என்று ஐ.நா. குழு கூறியது.
இனப்படுகொலையில் இருந்து தப்பியவர்களால் நிறுவப்பட்ட இஸ்ரேல், அதன் நடவடிக்கைகள் காரணமாக தொடர்ச்சியான தரைவழித் தாக்குதல்கள் மற்றும் சர்வதேச சட்டத்தைப் புறக்கணித்தல் காரணமாக தற்போது உலகளாவிய தனிமைப் படுத்தலை எதிர்கொள்கிறது.