காசிரங்காவில் மஞ்சள்நிறத் தொண்டை கொண்ட கரும்வெருகு
June 5 , 2026 82 days 197 0
அஸ்ஸாமின் காசிரங்கா தேசியப் பூங்கா மற்றும் புலிகள் காப்பகத்தில் முதன் முறையாக மஞ்சள்நிறத் தொண்டை கொண்ட கரும்வெருகு (மார்டெஸ் ஃபிளாவிக்குலா) பதிவு செய்யப்பட்டுள்ளது.
மஞ்சள்நிறத் தொண்டை கொண்ட கரும்வெருகு என்பது மஸ்டெலிடே குடும்பத்தைச் சேர்ந்த பகல்நேரம் இயங்கும், மரம் ஏறும் பாலூட்டியாகும்.
ஓர் இடைநிலை வேட்டையாடியான இது உணவுச் சங்கிலியில் முதன்மை வேட்டையாடிகளுக்கு கீழே உள்ள நடுத்தர அளவிலான மாமிச உண்ணி ஆகும்.
இந்த இனம் இமயமலைப் பகுதி மற்றும் அஸ்ஸாம் உட்பட வடகிழக்கு இந்தியா முழுவதும் காணப்படுகிறது.
இது விதை பரவலுக்கு உதவுவதன் மூலம் காடுகளின் மீளுருவாக்கத்திற்கு ஆதரவு அளிக்கும் முக்கிய சுற்றுச்சூழல் பங்கைக் கொண்டுள்ளது.
இது வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972-இன் அட்டவணை II-இன் கீழ் பாதுகாக்கப் படுகிறது.