உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களுக்கு இணங்க, காசிரங்கா தேசியப் பூங்கா மற்றும் புலிகள் காப்பகத்தை (KNPTR) சுற்றியுள்ள சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தை (Eco-Sensitive Zone - ESZ) 10 கிலோ மீட்டரிலிருந்து 1 கிலோ மீட்டராகக் குறைக்க அசாம் அரசு திட்டமிட்டுள்ளது.
பாதுகாக்கப்பட்ட காடுகள், தேசியப் பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களைச் சுற்றி குறைந்தபட்சம் 1 கி.மீ சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம் அறிவிக்கப்பட வேண்டும் என்று 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவில் திருத்தம் செய்து, ஒரே மாதிரியான 1 கி.மீ விதி உள்ளூர் நடவடிக்கைகளை பாதிக்கலாம் மற்றும் மனித-வனவிலங்கு மோதலை அதிகரிக்கலாம் என்று கூறியது, ஆனால் பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 1 கி.மீ தூரத்திற்குள் சுரங்கப் பணிகளுக்கு தடை நீடிக்கிறது.
முன்மொழியப்பட்ட குறைப்பு, கட்டுமானத் திட்டங்கள் உட்பட காசிரங்காவைச் சுற்றியுள்ள மேம்பாட்டுப் பணிகளை எளிதாக்கும் நோக்கம் கொண்டது.
காசிரங்கா தேசியப் பூங்கா ஒரு யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளமாகும், மேலும் இது அழிந்து வரும் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்தின் முக்கிய வாழ்விடமாகும்.
சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தை 1 கி.மீ ஆகக் குறைப்பது தொடர்பான முன்மொழிவை மத்திய அரசுக்கு அசாம் அரசு அனுப்பவுள்ளது.