TNPSC Thervupettagam

காஞ்சிபுரம் இட்லிக்குப் புவிசார் குறியீடு

July 27 , 2025 16 days 86 0
  • தமிழ்நாடு உணவுப் பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் (TNAPEx) புவி சார் குறியீடு பெறுவதற்கு விண்ணப்பத்தைத் தாக்கல் செய்துள்ளது.
  • இது பிரபலமான கோயில் இட்லி அல்லது காஞ்சிபுரம் இட்லிக்குப் புவிசார் குறியீடு (GI) என்ற அடையாளத்தைக் கோருகிறது.
  • இது அரைத்தப் புழுங்கல் அரிசி மற்றும் உளுந்து ஆகியவற்றைப் பயன்படுத்தித் தயாரிக்கப் படுகிறது
  • இது அடர்த்தியான மற்றும் நொறுங்கிய தானிய அமைப்பை அளிக்கிறது
  • இது மென்மையான மற்றும் பஞ்சு போன்ற தென்னிந்திய இட்லியைப் போலிருக்காது.
  • இது அந்த நகரத்தில் உள்ள ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோவிலில் வழங்கப்படும் பிரசாதங்களில் ஒன்றாகும்.
  • இந்த நகரம் பெரும்பாலும் பட்டுப் புடவைகளுக்குப் பெயர் பெற்றது ஆகும்.
  • மதுரை வேளாண் வணிகப் புத்தாக்க மன்றம் ஆனது இந்த விண்ணப்பத்தினை தாக்கல் செய்துள்ளது.
  • மதுரை வேளாண் வணிகப் புத்தாக்க மன்றம் என்பது NABARD வங்கி மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் ஒரு முன்னெடுப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்