காடர் பழங்குடியினத்தைச் சேர்ந்த சில குடும்பங்கள் ஆனைமலைப் புலிகள் காப்பகத்தின் உள்பகுதியில் வீட்டுமனைக்கான பட்டாக்களைப் பெற்றுள்ளனர்.
காடர் என்பவர்கள் தமிழகத்திலுள்ள கோயம்புத்தூர் மற்றும் கேரளாவிலுள்ள கொச்சின் ஆகியவற்றுக்கு இடையிலான மலைப்பாங்கான எல்லைப்பகுதியினூடே வாழும் தென்னிந்தியாவின் ஒரு சிறிய பழங்குடி இனமாகும்.
கேரள மாநிலத்தின் 5 பழமையான பழங்குடிகளுள் ஒன்றான காடர் இனமானது அந்த மாநிலத்தின் மொத்த பழங்குடியின மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 5 சதவீதத்தைக் கொண்டுள்ளது.
இவர்கள் தமிழ் மற்றும் கன்னடம் போன்ற திராவிட மொழிகளைப் பேசுகின்றனர்.
காடர் பழங்குடியினர் கேரளாவில் குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கப்படக் கூடிய பழங்குடியினக் குழுக்களாக பட்டியலிடப்பட்டுள்ள அதே வேளையில் அவர்கள் தமிழகத்தில் அவ்வாறு குறிப்பிடப் படவில்லை.
இந்தக் குழுவின் கீழ் பட்டியலிடப் பட்டுள்ளப் பழங்குடியினர் 2006 ஆம் ஆண்டு வன உரிமைகள் சட்டத்தின் கீழ் வாழிட உரிமைகளைப் பெற அனுமதி பெறுவர்.