ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பானது (UNEP) காட்டுத்தீ பற்றிய தனது அறிக்கையில், ‘காட்டுத்தீக்கான தயார்நிலை விதிமுறைகளை’ ஏற்றுக் கொள்ளுமாறு உலக அரசாங்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பானது காட்டுத்தீ நிகழ்வுகள் ஏற்படுவது எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்று எச்சரித்து, அதற்காக "காட்டுத்தீக்கான தயார்நிலை விதிமுறைகளை" பரிந்துரைத்தது.
இந்த விதிமுறையானது, செலவினங்களில் 66 சதவீதத்தினை (மூன்றில் இரண்டு பங்கு) திட்டமிடல், தடுப்பு, தயார்நிலை மற்றும் மீட்பு ஆகிய பணிகளுக்காக வேண்டி ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
மீதமுள்ள 34% (மூன்றில் ஒரு பங்கு) நிதிகளை மீட்பு நடவடிக்கைகளுக்காக வேண்டி செலவிடலாம்.