காட்டுத் தீ குறித்த இந்தியாவின் வன ஆய்வறிக்கை (FSI)
March 11 , 2021 1619 days 704 0
இந்தியாவில் வன ஆய்வு நிறுவனமானது நாட்டில் ஏற்பட்டு வரும் காட்டுத் தீ குறித்த ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
காட்டுத் தீ ஆனது உலக அளவில் முக்கியத்துவம் பெற்று வரும் ஒரு பிரச்சினையாகும்.
பல்வேறு நாடுகளில், காட்டுத் தீ ஆனது பல்வேறு பகுதிகளில் பரவி எரிந்து கொண்டு இருக்கின்றது. தீ ஏற்படும் காலமானது புவி வெப்பமயமாதல் காரணமாக அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.
முக்கிய அம்சங்கள்
2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 மற்றும் மார்ச் 1 ஆகிய தினங்களுக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் ஒடிசாவில் குறைந்தது 5,291 காட்டுத் தீ நிகழ்வுகள் பதிவு செய்யப் பட்டு உள்ளன. இது நாட்டில் ஏற்பட்ட மிக அதிக அளவிலான நிகழ்வு ஆகும்.
மகுவா மலர்கள் மற்றும் கெண்டு இலைகளின் சேகரிப்பு, இடப்பெயர்வு வேளாண்மை மற்றும் வனப் பகுதிகளில் கால்நடைகளை மேய்த்தல் ஆகியவை ஒடிசாவில் காட்டுத் தீ ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்களாகும்.
FSI தரவின் படி இதே காலக் கட்டத்தில் தெலுங்கானாவானது 1527 நிகழ்வுகளுடன் 2வது அதிக தீ விபத்துகளைப் பதிவு செய்துள்ளது.
அதற்கடுத்து மத்தியப் பிரதேசம் (1507) மற்றும் ஆந்திரப் பிரதேசம் (1292) ஆகியவற்றில் அதிக தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன.