காணாமல் போன குழந்தைகளுக்கான சர்வதேச தினம் 2025 - மே 25
May 31 , 2025 181 days 141 0
காணாமல் போன குழந்தைகளைக் கண்டுபிடித்து, அவர்களது குடும்பங்களுடன் அவர்களை மீண்டும் ஒன்றிணைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை முன்னிலைப் படுத்துவதை இந்தத் தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது கடத்தல் மற்றும் சுரண்டலில் இருந்து குழந்தைகளை நன்குப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளையும் ஊக்குவிப்பதோடு, மீட்கப்பட்டவர்களையும் கௌரவிக்கிறது.
1979 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் பள்ளிக்குச் செல்லும் வழியில் காணாமல் போன ஆறு வயது சிறுவன் ஈடன் பாட்ஸ் என்பவர் காணாமல் போனதன் ஆண்டு நிறைவை அனுசரிக்கும் விதமாக இந்தத் தினம் கடைபிடிக்கப்படுகிறது.