காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையமானது சமீபத்தில் கையால் செய்யப்பட்ட, ஒருமுறை மட்டுமே பயன்படுத்த கூடிய காகிதச் செருப்புகள் மற்றும் முதல் முறையாக குழந்தைகள் அணியும் செருப்புகள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
முதன்முறையாக இந்த ஆணையமானது குழந்தை அணியும் ஆடை தயாரிப்புகளையும் அறிமுகப் படுத்தியுள்ளது.
இது இயற்கை இழைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படுவதால், இது சுற்றுச்சூழலைப் பாதிப்பதில்லை.
இந்த ஆணையமானது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.