பால்வெளி அண்டத்தில் உள்ள காந்தப்புலங்களுடன் கூடிய தூசித் துகள்களின் சீரமைப்பை உறுதிப்படுத்தும் ஓர் ஆய்வினை இந்திய வானியற்பியல் நிறுவனம் (IIA) முன்னேடுத்து நடத்தியது.
12,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள G34.43+0.24 எனப்படும் அகச்சிவப்பு கரும்பொருள் திரளை இந்தக் குழு ஆய்வு செய்தது.
சில மைக்ரோமீட்டர் அளவில் உள்ள தூசித் துகள்கள், சிலிகேட் மற்றும் கரிம / கார்பனேசியப் பொருட்களால் ஆனவை என்பதோடு மேலும் அவை விண்மீன் மண்டல இடையகங்கள் முழுவதும் காணப்படுகின்றன.
அவை நட்சத்திரம் மற்றும் கிரக உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன, என்பதோடு மேலும் 1949 ஆம் ஆண்டிலிருந்து கண்டறியப்பட்ட நட்சத்திர ஒளியின் துருவமுனைவாக்கத்தினை ஏற்படுத்துகின்றன.
துருவமுனைவாக்கம் குறித்தத் தரவுகள் ஆனது தூசித் துகள்கள் காந்தப்புலக் கட்டமைப்புகளை எவ்வாறு கண்டறிகின்றது என்பதையும், அடர்வான நட்சத்திர உருவாக்க மையங்களில் அவை எவ்வாறு மாறுபடுகிறது என்பதையும் வெளிப்படுத்தியது.
சூழ்நிலைகளைப் பொறுத்து தூசித் துகள்கள் வித்தியாசமாகச் செயல்படுவதை அறிவியலாளர்கள் கண்டறிந்தனர்.
சில சூழல்களில், இந்தத் தூசித் துகள்கள் காந்தப்புலங்களுடன் நேர்த்தியாக இணைகின்றன.
மற்றவற்றில், அவை வலுவான நட்சத்திர ஒளியில் மிக வேகமாகச் சுழன்று, சிறிய துண்டுகளாக உடைந்து, அவற்றின் சீரமைப்பைப் பலவீனப்படுத்துகின்றன.