இந்திய அரசானது, 'கானன் பிரஹாரி' எனப்படும் கைபேசி செயலி மற்றும் CMSMS இணைய தளம் ஆகியவற்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.
CMSMS என்பது நிலக்கரிச் சுரங்கக் கண்காணிப்பு மற்றும் மேலாண்மை அமைப்பு என்பதன் சுருக்கமாகும்.
இது அங்கீகரிக்கப்படாத நிலக்கரிச் சுரங்க நடவடிக்கைகளைப் பற்றி புகார் அளிக்கச் செய்வதற்கான வசதியினை வழங்குகிறது.
ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் சிறு கனிமங்களுக்கான சட்டவிரோதமான சுரங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது பெரும்பாலும் அதிகமாகக் காணப்படுகிறது.
அசாம் மற்றும் மேகாலயா போன்ற வடகிழக்கு மாநிலங்களில் நிலக்கரி போன்ற முக்கியக் கனிமங்களுக்கான சட்டவிரோதமான சுரங்க நடவடிக்கைகள் மேற் கொள்ளப் படுவது பெரும்பாலும் அதிகமாகக் காணப்படுகிறது.
சட்ட விரோதமான மணல் கடத்தலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.