சென்னையில் உள்ள CLRI - மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR-CLRI) காபி உமிக் கழிவுகளிலிருந்து தோல் போன்ற ஒரு பொருளை உருவாக்கியுள்ளது.
இந்தியா ஆண்டுக்கு சுமார் 3.5 லட்சம் டன் காபியை உற்பத்தி செய்கிறது, இதன் மூலம் சுமார் 1 லட்சம் டன் காபி உமிக் கழிவுகள் உருவாகின்றன.
தாவரங்களிலிருந்து பெறப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி காபி உமியை ஒரு பிணைப்பு அமைப்பாக (matrix) மாற்றுவதன் மூலமும், அதைத் தொடர்ந்து வண்ணம் பூசுதல், மேற்பூச்சு இடுதல் மற்றும் மேலெழுத்துரு அல்லது வடிவங்களை உருவாக்குதல் (embossing) ஆகியவற்றின் மூலமும் இப்பொருள் தயாரிக்கப்படுகிறது.
இந்தத் தொழில்நுட்பமானது பூஜ்ஜிய திரவ மற்றும் பூஜ்ஜிய திடக் கழிவு வெளியேற்றக் கருத்தைப் பின்பற்றுகிறது. மேலும் பைகள், பணப்பைகள், காலணிகள் மற்றும் நோட்டுப் புத்தக அட்டைகளைத் தயாரிக்க இதைப் பயன்படுத்தலாம்.
இது பாலியூரிதீன் மற்றும் பாலிவினைல் குளோரைடு போன்ற பெட்ரோலியம் சார்ந்த செயற்கை பொருட்களுக்கு மாற்றாகக் கருதப்படுகிறதே தவிர, உண்மையான தோலுக்கு மாற்றாக அல்ல.