காப்பீட்டுத் துறையில் இயற்கைப் பேரிடர் (Force Majeure)
April 7 , 2020 1963 days 774 0
கோவிட் – 19 தொற்றினால் ஏற்படும் இறப்புகளுக்கு “இயற்கைப் பேரிடர்” (Force Majeure) பிரிவு பொருந்தாது என்று ஆயுள் காப்பீட்டுக் கழகம் அறிவித்துள்ளது.
அரசு மற்றும் தனியார் என்று அனைத்து விதக் காப்பீடு வழங்கும் நிறுவனங்களும் கோவிட் – 19 தொற்றால் ஏற்படும் இறப்புகள் குறித்த கோரிக்கைகள் மற்றும் நிவாரணங்களைச் செயல்படுத்த இருக்கின்றன.
ஒரு ஒப்பந்த முறையில் இயற்கைப் பேரிடர் பிரிவு என்பதனை தற்பொழுது கோவிட் – 19 தொற்றின் காரணமாக குறித்த காலத்திற்குள் அந்த ஒப்பந்தம் முடிக்கப் படவில்லை என்று குறிப்பிட்டு வாதிட உபயோகப்படுத்த முடியும்.
“இயற்கை பேரிடர்” என்பது எதிர்பார்க்கப் படாத அல்லது கட்டுப்படுத்தப்படாத ஒரு நிகழ்வு அல்லது தாக்கம் என்று வரையறுக்கப் படுகின்றது.
“இயற்கைப் பேரிடர் பிரிவானது” எதிர்பார்க்கப் படாத அவசரச் சூழ்நிலைகளின் காரணமாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
இது இந்திய ஒப்பந்தச் சட்டம், 1972ன் கீழ் வைக்கப்பட்டுள்ளது.