காப்பீட்டுத் துறையில் 100 சதவிகித அந்நிய நேரடி முதலீடு (FDI)
May 8 , 2026 15 hrs 0 min 49 0
அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்ட (FEMA) விதிகள், 2019-ஆம் ஆண்டில் செய்யப் பட்ட திருத்தங்கள் மூலம், காப்பீட்டுத் துறையில் தானியங்கி வழிமுறையின் கீழ் 100% அந்நிய நேரடி முதலீட்டை (FDI) இந்தியா அனுமதித்துள்ளது.
தானியங்கி வழிமுறையின் கீழ், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய அரசின் முன் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை.
இந்தப் புதிய விதிகள் காப்பீட்டு நிறுவனங்கள், தரகர்கள், ஆலோசகர்கள் மற்றும் மூன்றாம் தரப்பு நிர்வாகிகள் (TPAs) ஆகியோருக்குப் பொருந்தும்.
அனைத்து முதலீடுகளும் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி முகமையால் (IRDAI) ஒழுங்குபடுத்தப்படும்.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) அந்நிய நேரடி முதலீட்டு வரம்பு மட்டும் தொடர்ந்து 20% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.