இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமானது (IRDAI), காப்பீட்டுத் துறையில் இந்திய கணக்கியல் தரநிலைகளை (Ind AS) அறிமுகப்படுத்தி உள்ளது.
Ind AS என்பது 2015 ஆம் ஆண்டில் பெருநிறுவன விவகார அமைச்சகத்தால் அறிவிக்கப் பட்ட கணக்கியல் விதிகளாகும்.
இவை சர்வதேச நிதி அறிக்கை தரநிலைகளுடன் (IFRS) ஒத்துப்போகின்றன.
இந்தத் தரநிலைகள் நியாயமான மதிப்புக் கணக்கியல், சிறந்த வெளிப்படைத் தன்மை மற்றும் நிதி அறிக்கையிடலில் மேம்பட்ட நம்பகத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன.
இதற்கு முன்பு, இந்தியா 'இந்தியா பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கியல் கோட்பாடுகளை' (Indian GAAP) பின்பற்றியது என்பதோடு மேலும் இது வரலாற்றுச் செலவு கணக்கியல் அடிப்படையில் 18 தரநிலைகளைக் கொண்டிருந்தது.
IRDAI என்பது இந்தியாவின் காப்பீட்டுத் துறையை ஒழுங்குபடுத்தவும் மேம்படுத்தவும் IRDAI சட்டம், 1999-இன் கீழ் அமைக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.