காப்பீட்டு இடையீட்டாளர்களில் 100 சதவிகிதம் அன்னிய நேரடி முதலீடு
March 1 , 2020 2007 days 599 0
தொழிற்துறை ஊக்குவிப்பு மற்றும் உள்நாட்டு வணிகத் துறை, ஒருங்கிணைந்த அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கை 2017 ஐ திருத்தியுள்ளது.
நேரடி வழி மூலம் காப்பீட்டு இடையீட்டாளர்களின் (insurance intermediaries) 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
காப்பீட்டு இடைத் தரகர்கள், மறுகாப்பீட்டு இடைத் தரகர்கள், காப்பீட்டு ஆலோசகர்கள், பெருநிறுவன முகவர்கள், மூன்றாம் தரப்பு நிர்வாகிகள், மதிப்பீட்டாளர்கள் மற்றும் இழப்பு மதிப்பீட்டாளர்கள் இதில் அடங்குவர்.
முன்னதாக நேரடி வழி மூலம் காப்பீட்டு இடையீட்டாளர்களுக்கு 49 சதவீதம் வரை அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப் பட்டது.