TNPSC Thervupettagam

காப்புரிமை அற்ற லுகேமியா மருந்து – டசாடினிப்

November 11 , 2025 7 days 60 0
  • அலெம்பிக் பார்மாசூட்டிகல்ஸ் என்ற நிறுவனமானது அதன் பொதுப் பெயர் மருந்தான டசாடினிப் மாத்திரைகளுக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடமிருந்து (USFDA) இறுதி ஒப்புதலைப் பெற்றுள்ளது.
  • பெரியவர்கள் மற்றும் குழந்தைகளில் பிலடெல்பியா குரோமோசோம்-பாசிட்டிவ் நாட் பட்ட மைலாய்டு லுகேமியா (நாள்பட்ட எலும்பு மஜ்ஜை புற்றுநோய்) மற்றும் மிகக் கடுமையான லிம்போபிளாஸ்டிக் லுகேமியா (கடும் நிணநீர்க் குழியப் புற்றுநோய்) ஆகியவற்றிற்குச் சிகிச்சையளிக்க வேண்டி டசாடினிப் மாத்திரைகள் பயன்படுத்தப் படுகின்றன.
  • லுகேமியாவின் நாள்பட்ட, துரிதப்படுத்தப்பட்ட அல்லது தீவிரமான கட்டங்களில் இமாடினிப் உள்ளிட்ட முந்தைய சிகிச்சைக்கான எதிர்ப்புத் திறன் அல்லது சகிப்புத் திறன் இல்லாத நோயாளிகளுக்கு டசாடினிப் வழங்க பரிந்துரைக்கப் படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்