இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள், அந்தந்த நாடுகளில் பதிவு செய்யப்பட்ட எந்தவொரு சர்வதேச காப்புரிமை விண்ணப்பித்திற்கான சர்வதேச தேடல் மற்றும் சர்வதேச முதன்மை ஆய்வு ஆணையமாக ஒன்றுக்கொன்று செயல்படுவதற்கு வேண்டி தங்களது அலுவலகங்களுக்கு அங்கீகாரம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளன.
இம்முடிவானது சமீபத்தில் நடைபெற்ற காப்புரிமை நடவடிக்கை நெடுஞ்சாலைத் திட்டத்தின் மறு ஆய்வு சந்திப்பின் போது மேற்கொள்ளப்பட்டது.
காப்புரிமை நடவடிக்கை நெடுஞ்சாலைத் திட்டம் என்பது சில காப்புரிமை அலுவலகங்களிடையே தகவல்களைப் பரிமாறிக் கொள்வதன் மூலம் விரைவான காப்புரிமை நடவடிக்கை செயல்முறைகளை வழங்குவதற்கான ஒரு முன் முயற்சிகளின் தொகுப்பாகும்.