28-வது காமன்வெல்த் அரசுத் தலைவர்கள் மாநாடு (CHOGM) 2026 ஆம் ஆண்டு நவம்பர் 4 அன்று ஆன்டிகுவா மற்றும் பார்புடாவின் செயின்ட் ஜான்ஸ் நகரில் நிறைவடைந்தது.
“வளமான காமன்வெல்த் அமைப்பிற்கான கூட்டாண்மை மற்றும் முதலீட்டை விரைவுபடுத்துதல்” என்ற கருத்துருவின் கீழ் இம்மாநாடு நடைபெற்றது.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல், இளைஞர் திறன் மேம்பாடு, வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றிற்காக சுமார் 500 மில்லியன் அமெரிக்க டாலர் புதிய நிதி உறுதிமொழிகள் திரட்டப்பட்டன.
பருவநிலை மீள்தன்மை, நிலையான வளர்ச்சி, புத்தாக்கம், சமத்துவம், வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவற்றில் இம்மாநாட்டின் விவாதங்கள் கவனம் செலுத்தின.
உறுப்பு நாடுகளில் உள்ள பொருட்கள், சேவைகள் மற்றும் வர்த்தக வாய்ப்புகள் குறித்த தகவல்களை வழங்குவதற்காகவும், குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSMEs) பயனளிக்கும் வகையிலும் காமன்வெல்த் வர்த்தக இணையதளம் தொடங்கப்பட்டது.