பாகிஸ்தானின் இராணுவமானது, இந்தியாவிற்கு எதிராக துருக்கி நாட்டின் பைக்கர் YIHA III காமிகேஸ் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தியது.
காமிகேஸ் ஆளில்லா விமானங்கள் என்பவை ஒரு இலக்கை நோக்கிச் சென்று, அதன் பின்னர் அவற்றை அடையாளம் கண்டவுடன் ஒரு வெடிக்கும் கணையாக மாறி அவற்றின் மீது மோதுவதன் மூலம் இலக்குகளைத் தாக்குகின்றன.
தொலைவிலிருந்து இயக்கக் கூடிய வகையிலான ஒற்றைப் பயன்பாட்டுத் தாக்குதல் ஆயுதங்கள் ஆனது 'தற்கொலைத் தாக்குதல்களில் ஈடுபடும் ஆளில்லா விமானங்கள்' என்றும் அழைக்கப்படுகின்றது.