TNPSC Thervupettagam

கார்கில் போரில் மரணமடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துதல்

May 29 , 2019 2260 days 738 0
  • பஞ்சாபின் பதின்டாவில் உள்ள பிசியானா விமானப் படைத் தளத்திலிருந்து இந்திய விமானப் படையின் தலைமைத் தளபதியான பி.எஸ். தனோவா தலைமையில் 4 மிக்-21 விமானத்தில் பறந்து சென்று கார்கில் போரில் மரணமடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
  • கார்கில் போரின் போது மரணமடைந்தவர்களைக் குறிக்கும் விதமாக இரு விமானங்களிடையே ஒரு இடைவெளியுடன் கூடிய ஒரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டது. இது ஒரு வில் போன்ற ஒரு அமைப்பாகும்.
  • இது கார்கிலில் சபெத் சாகர் நடவடிக்கையின் போது உயிர்த் தியாகம் செய்த வீரர்களைக் கௌரவிப்பதற்காக நடத்தப்பட்டது.
  • சபெத் சாகர் நடவடிக்கை என்பது கார்கில் போரின் போது தரைப் படையுடன் இணைந்துப் போரிட்ட இந்திய விமானப் படையின் பணிக்கு வழங்கப்பட்ட ஒரு குறியீட்டுப் பெயராகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்