TNPSC Thervupettagam

கார்கில் விஜய் திவாஸ் 2026 - ஜூலை 26

July 26 , 2026 2 days 58 0
  • இந்த நாள் கார்கில் போரில் (1999) இந்தியாவின் வெற்றியைக் குறிக்கிறது மற்றும் விஜய் நடவடிக்கையின் போது தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறது.
  • ஊடுருவல்காரர்கள் கட்டுப்பாட்டுக் கோட்டை (LoC) தாண்டி கார்கில் பிரிவில் உள்ள இந்திய நிலைகளை ஆக்கிரமித்ததை அடுத்து 1999 ஆம் ஆண்டு மே மாதத்தில் இந்த மோதல் தொடங்கியது.
  • கட்டுப்பாட்டுக் கோடு (LoC) என்பது ஜம்மு காஷ்மீரின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டுப் பகுதிகளைப் பிரிக்கும் உண்மையான இராணுவ எல்லையாகும்.
  • ஆக்கிரமிக்கப்பட்ட நிலைகளை மீண்டும் கைப்பற்ற இந்திய ராணுவம் 'விஜய் நடவடிக்கை' என்ற நடவடிக்கையைத் தொடங்கியது, அதேவேளை இந்திய விமானப் படை (IAF) 'சஃபேத் சாகர் நடவடிக்கை' மூலம் அதற்கு ஆதரவளித்தது.
  • கட்டுப்பாட்டுக் கோட்டை (LoC) தாண்டாமலேயே ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்து நிலைகளையும் இந்தியா மீண்டும் கைப்பற்றியது என்பதோடு மேலும் 1999 ஆம் ஆண்டு ஜூலை 14 அன்று ஆபரேஷன் விஜய் வெற்றிகரமானதாக அறிவிக்கப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்