TNPSC Thervupettagam

கார்னே கோட்பாடு

January 26 , 2026 14 hrs 0 min 24 0
  • டாவோஸில் உள்ள உலகப் பொருளாதார மன்றத்தில் கனடா பிரதமர் மார்க் கார்னேயால் கார்னே கோட்பாடு முன்மொழியப் பட்டது.
  • அமெரிக்க-சீனப் போட்டியில் தரப்புகளைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர்ப்பதற்கு நடுநிலை நாடுகளுக்கு "மூன்றாவது பாதை"யை இது பரிந்துரைக்கிறது.
  • இந்த அணுகுமுறை அதே நேரத்தில் உலகளாவிய ஒத்துழைப்பை ஊக்குவித்து, தனிப்படுத்தச் செய்யும் கொள்கையை ஊக்குவிக்காமல் உத்தி சார் சுயாட்சியை ஊக்குவிக்கிறது.
  • நடுநிலை நாடுகள் இறையாண்மையைப் பாதுகாக்கவும், உலகளாவிய விவகாரங்களில் தங்கள் செல்வாக்கை வலுப்படுத்தவும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கார்னே வலியுறுத்தினார்.
  • சீனா, கத்தார், இந்தியா, ஆசியான் நாடுகள் மற்றும் மெர்கோசூர் ஆகியவற்றுடன் உத்தி சார் கூட்டாண்மைகள் மூலம் கனடா இந்தக் கோட்பாட்டைச் செயல்படுத்தி உள்ளது.
  • இந்தக் கோட்பாடு இந்தியா போன்ற பெரும் வல்லரசு நாடுகளின் போட்டியை வழி நடத்தும் நாடுகளுக்கு மிகவும் பொருத்தமானது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்