கார்பன் நடுநிலையை அடைவதற்கான சுவிட்சர்லாந்து அரசின் திட்டம்
July 25 , 2023 754 days 340 0
2050 ஆம் ஆண்டிற்குள் கார்பன் நடுநிலையை அடைவதை நோக்கமாகக் கொண்டு ஒரு புதிய பருவநிலை மசோதாவினைச் சுவிட்சர்லாந்து அரசு அறிமுகம் செய்துள்ளது.
இந்தச் சட்டம் ஆனது, இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயுவைச் சார்ந்திருப்பதைக் குறைக்கச் செய்வதற்காகவும், பல்வேறு பசுமை எரிபொருள் மாற்றுப் பொருட்களின் பயன்பாட்டினை ஊக்குவிப்பதற்கும் முயல்கிறது.
அடுத்தப் பத்தாண்டுகளுக்கு இரண்டு பில்லியன் சுவிஸ் பிராங்குகள் (2.2 பில்லியன் டாலர்) நிதி உதவி வழங்கப்படும் என்று இச்சட்டம் கூறுகிறது.
எரிவாயு அல்லது எண்ணெய் ஆகிய எரிபொருளைப் பயன்படுத்தும் சில வெப்பமேற்ற அமைப்புகளில் பருவநிலைக்கு ஏற்ற வகையில் பல மாற்றுப் பொருட்களைப் மிகவும் பயன்படுத்தச் செய்வதை ஊக்குவிக்கவும், அத்துடன் பசுமைவழிப் புத்தாக்கங்களை உருவாக்கச் செய்வதற்குப் பல்வேறு நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காகவும் என்று இந்த நிதி பயன்படுத்தப்படும்.