சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகமானது, கூடுதலாக 208 அதிக உமிழ்வு வெளியிடும் அலகுகளுக்கு பசுமை இல்ல வாயு உமிழ்வுச் செறிவுக் குறியீட்டு இலக்குகளை அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு பெட்ரோலியச் சுத்திகரிப்பு நிலையங்கள், பெட்ரோ கெமிக்கல்ஸ், ஜவுளி மற்றும் இரண்டாம் நிலை அலுமினியம் ஆகிய நான்கு புதிய துறைகளை கார்பன் மதிப்பு வர்த்தகத் திட்டத்தின் கீழ் கொண்டு வந்துள்ளது.
இந்தச் சேர்க்கையின் மூலம், இந்தத் திட்டத்தின் கீழ் உள்ள கட்டாய நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கை 490 ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக, அலுமினியம், சிமென்ட், குளோர்-காரம் மற்றும் கூழ் மற்றும் காகிதத் துறைகளுக்கான பசுமை இல்ல வாயு வெளியேற்றச் செறிவுக் குறியீட்டு இலக்குகள் அக்டோபர் 2025ல் அறிவிக்கப்பட்டன.
இந்தியக் கார்பன் சந்தையைச் செயல்படுத்தும் நோக்கில், கார்பன் மதிப்பு வர்த்தகத் திட்டம் (CCTS) 2023- அறிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டம் அதிகப்படியான உமிழ்வுக் குறைப்புகளை அடையும் தொழில்கள் வர்த்தகத்திற்கான கார்பன் மதிப்பு சான்றிதழ்களைப் பெற அனுமதிக்கிறது.