கார்பன் விலை நிர்ணயத்தின் நிலை மற்றும் போக்குகள் 2024
May 29 , 2024 568 days 490 0
2023 ஆம் ஆண்டில், உலக வங்கியின் வருடாந்திர "கார்பன் விலையிடல் நிலை மற்றும் போக்குகள் 2024" அறிக்கையின்படி, கார்பன் விலையிடல் மூலமான வருவாயானது 104 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.
2024 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, உலகளாவிய உமிழ்வுகளில் 24% ஆனது தற்போது மதிப்பிடப்பட்டுள்ளது.
உலகளவில் 75 கார்பன் வரிகள் மற்றும் உமிழ்வு வர்த்தக திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.
கார்பன் விலை நிர்ணயக் கருவிகள் உலகளாவிய உமிழ்வுகளில் சுமார் 24 சதவீத உமிழ்விற்கு விலையினை நிர்ணயித்துள்ளது.
தற்போது நிர்ணயிக்கப் படுவதற்காக என்று பரிசீலிக்கப் படும் கார்பன் வரிகள் மற்றும் உமிழ்வு வர்த்தக அமைப்புகள் (ETSs) இதன் பரவலைச் சுமார் 30% வரையில் உயர்த்தலாம்.
பிரேசில், இந்தியா, சிலி, கொலம்பியா மற்றும் துருக்கி உள்ளிட்ட பெரிய நடுத்தர வருமான நாடுகள் கார்பன் விலை நிர்ணயம் நடைமுறையில் முன்னேற்றம் அடைந்து வருகின்றன.