TNPSC Thervupettagam

காற்றாலை மறு ஆற்றல் உற்பத்திக் கொள்கையில் திருத்தம்

January 24 , 2026 2 days 48 0
  • தமிழ்நாட்டில் காற்றாலைகளுக்கான திருத்தப்பட்ட மறு ஆற்றல் உற்பத்திக் கொள்கையை தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • ஏப்ரல் 1, 2016 ஆம் தேதிக்கு முன் இயக்கப்பட்ட காற்றாலை மின் உற்பத்தியாளர்களுக்கு, 20 ஆண்டுகள் செயல்பாட்டுக் காலம் முடிந்ததும், அதன் உரிமையாளர்கள் மறு ஆற்றல் அளிப்பு அல்லது புதுப்பித்தல் அல்லது செயல்பாட்டுக் கால நீட்டிப்பை கட்டாயமாகத் தேர்வு செய்ய வேண்டும்.
  • ஏப்ரல் 1, 2016 அன்று அல்லது அதற்குப் பிறகு இயக்கப்பட்ட காற்றாலை மின் உற்பத்தியாளர்களைப் பொறுத்தவரை, 25 ஆண்டுகள் செயல்பாட்டுக் காலம் முடிந்த பிறகு மறு ஆற்றல் உருவாக்கத்தினை மேற்கொள்ள வேண்டிய தேவையைப் பயன்படுத்தலாம்.
  • 20 ஆண்டு செயல்பாட்டுக் காலத்திற்குப் பிறகு, கடந்த மூன்று நிதியாண்டுகளில் NIWE போன்ற சுயாதீன நிறுவனத்தால் சான்றளிக்கப்பட்ட மதிப்பிடப்பட்ட உற்பத்தியில் 70 சதவீதத்திற்கும் குறையாத சராசரி உற்பத்தியைக் கொண்ட நிறுவனங்கள் செயல்பாட்டுக் கால நீட்டிப்புக்கு தகுதியுடையவை ஆகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்