காற்றாலை மின் உற்பத்தி விநியோகச் சங்கிலி மேலாண்மை வலைத்தளம்
June 21 , 2026 16 hrs 0 min 32 0
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகமானது கோவாவில் நடைபெற்ற உலகளாவிய காற்று தின மாநாட்டில், இந்தியாவின் முதல் பிரத்யேக காற்றாலை மின் உற்பத்தி விநியோகச் சங்கிலி மேலாண்மை வலைத்தளமான WT-MARUT-ஐ (காற்றாலை – பொருட்கள், வளங்கள் மற்றும் தொழில்நுட்பம்) அறிமுகப்படுத்தியது.
WT-MARUT என்பது இந்தியாவின் உள்நாட்டு காற்றாலை உற்பத்திக்கான விநியோகச் சங்கிலியை நிர்வகிக்கவும், கண்காணிக்கவும் மற்றும் மேம்படுத்தவும் வடிவமைக்கப் பட்ட ஒரு உள்நாட்டு, மையப்படுத்தப்பட்ட டிஜிட்டல் தளமாகும்.
இந்த வலைதளமானது உள்நாட்டு காற்றாலை உற்பத்தித் திறனை வலுப்படுத்தச் செய்வதையும், காற்றாலை எரிசக்தி விநியோகச் சங்கிலி முழுவதும் உள்ளடக்கத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது விநியோகச் சங்கிலி குறித்த முழுமையான பார்வை, வழங்குநர் கண்டுபிடிப்பு, அங்கீகரிக்கப்பட்ட மாதிரிகள் மற்றும் உற்பத்தியாளர்களின் பட்டியல் (ALMM) இணக்கம் மற்றும் காற்றாலை துறையில் உள்ள பங்குதாரர்களுக்கான கூட்டுத் தளம் ஆகியவற்றை வழங்குகிறது.
இந்தியாவின் மதிப்பிடப்பட்ட காற்றாலை மின்திறனான 1,164 ஜிகாவாட்-இல் (GW), இதுவரை 56.1 ஜிகாவாட் திறன் கொண்ட காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன என்பதோடு 2030 ஆம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட் காற்றாலை மின்திறனை அடைய வேண்டும் என்ற தேசிய இலக்கை அடைய இந்த வலைதளம் துணை புரியும்.