TNPSC Thervupettagam

காலநிலை திறன்மிகு நகரங்கள் ஆய்வுக் கட்டமைப்பு (CSCAF) 2.0

September 15 , 2020 1702 days 681 0
  • மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகமானது காலநிலை திறன்மிகு நகரங்கள் மற்றும் ஆய்வுக் கட்டமைப்பு 2.0 மற்றும்மக்கள் சவால்களுக்கான தெருக்கள்ஆகியவற்றைத் தொடங்கியுள்ளது.
  • இது முதலீடுகளுடன் சேர்த்து நகரங்களின் நடவடிக்கைகளைத் திட்டமிட்டு மற்றும் செயல்படுத்தும் அதே வேளையில் காலநிலையை எதிர்த்துப் போராடும் நகரங்களுக்கான ஒரு தெளிவான செயல்திட்டத்தை அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • CSCAF (Climate Smart Cities Assessment Framework) முன்னெடுப்பானது இந்தியாவில் நகரத் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டிற்காக காலநிலை தாங்கு அணுகுமுறையை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தச் செயல்திட்டமானது 5 பிரிவுகளிடையே 28 குறிகாட்டிகளைக் கொண்டுள்ளது.
    • ஆற்றல் மற்றும் பசுமைக் கட்டிடங்கள்
    • நகரத் திட்டமிடல், பசுமை உள்ளடக்கம் மற்றும் பல்லுயிர்ப் பெருக்கம்
    • போக்குவரத்து மற்றும் காற்றின் தரம்
    • நீர் மேலாண்மை
    • கழிவுகள் மேலாண்மை
  • மக்கள் சவால்களுக்கான தெருக்கள் என்பது நமது நகரங்களை நடப்பதற்கு உகந்ததாக மற்றும் நடப்பவர்களுக்கு (நடைபாதையில்) உகந்த வகையில் மாற்றுவதற்கான ஓர் எதிர்வினையாகும்.
  • இது விரைவான, புத்தாக்கத் தன்மையுள்ள மற்றும் குறைந்த செலவு கொண்ட நடவடிக்கைகளின் மூலம் நடப்பதற்கு உகந்த மற்றும் வலுவான தெருக்களை உருவாக்குவதற்காக வேண்டி நகரங்களை தூண்டுவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்