காலநிலை நெகிழ்திறன் மழை சார்ந்த விவசாயத்திற்கான ஒப்பந்தம்
March 13 , 2020 1990 days 621 0
நீர் மேலாண்மை நடைமுறைகளை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு, இமாச்சலப் பிரதேச அரசு மற்றும் உலக வங்கி ஆகியவை கடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
இது இமாச்சலப் பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமப் பஞ்சாயத்துகளில் (கிராம சபைகளில்) விவசாய உற்பத்தித் திறனை அதிகரிக்க இருக்கின்றது.
இந்தத் திட்டமானது காடுகள், மேய்ச்சல் நிலங்கள் மற்றும் புல்வெளிகளில் உள்ள நீர்வள ஆதாரங்களை மேம்படுத்துவதோடு, இமாச்சலப் பிரதேசத்திலும் அதற்குக் கீழ்நிலையில் உள்ள மாநிலங்களிலும் நிலையான விவசாயத்திற்குத் தேவையான நீர் கிடைப்பதை உறுதி செய்ய இருக்கின்றது.