காலநிலை மாற்றம் தொடர்பான 29வது BASIC அமைச்சரவைக் கூட்டம்
November 5 , 2019 2079 days 743 0
காலநிலை மாற்றம் குறித்த BASIC (பிரேசில், தென்னாப்பிரிக்கா, இந்தியா, சீனா) நாடுகளின் 29வது அமைச்சரவைக் கூட்டமானது சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்றது.
2020 ஆம் ஆண்டுக்குள் ஆண்டுதோறும் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை வெளிப்படையான மற்றும் மானிய அடிப்படையிலான முறையில் வழங்குவதற்காக காலநிலை நிதிக்கான பொறுப்புகளை நிறைவேற்றுமாறு வளர்ந்த நாடுகளை அமைச்சரவைக் கூட்டமானது கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தியா 30வது BASIC அமைச்சரவைக் கூட்டத்தை நடத்த உள்ளது.
BASIC பற்றி
BASIC நாடுகள் என்பவை புதிதாக தொழில்மயமாக்கப்பட்ட நான்கு பெரிய நாடுகளான பிரேசில், தென்னாப்பிரிக்கா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் ஒரு குழுமமாகும்.
அவர்களின் பொதுவான குறைந்தபட்ச தேவை வளர்ந்த நாடுகளால் பூர்த்தி செய்யப்படா விட்டால் ஒன்றுபட்டு வெளிநடப்பு செய்வது உட்பட, கூட்டாகச் சேர்ந்து செயல்பட 2009 ஆம் ஆண்டின் கோபன்ஹேகன் காலநிலை உச்சி மாநாட்டில் இந்த நான்கு நாடுகளும் உறுதி பூண்டுள்ளன.