நிதி ஆயோக் 2025–26 நிதியாண்டின் 2வது காலாண்டிற்கான (ஜூலை–செப்டம்பர் 2025) “காலாண்டு கால வர்த்தக கண்காணிப்பு” இன் ஆறாவது பதிப்பைப் புதுதில்லியில் வெளியிட்டது.
இந்த அறிக்கை, அந்த காலாண்டில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதிகள் சுமார் 8.5% வளர்ச்சியடைந்துள்ளதாகக் காட்டுகிறது.
இந்தியாவின் ஏற்றுமதிப் பொருட்களில் மின்னணு பொருட்கள் இரண்டாவது பெரிய பொருளாக மாறியது என்பதோடுமேலும் இதன் ஏற்றுமதி 2024 ஆம் ஆண்டில் 42.1 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது.
உள்நாட்டு மின்னணுப் பொருட்கள் உற்பத்தியை ஆதரிப்பதற்காக வேண்டி மின்னணு பொருட்கள் உற்பத்தித் திட்டத்தின் கீழ் மத்தியப் பட்ஜெட்டில் ₹40,000 கோடி ஒதுக்கப் பட்டது.
2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த வர்த்தக ஏற்றுமதியில் மின் வணிக ஏற்றுமதி 20-30% பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.