TNPSC Thervupettagam

காலாண்டு வர்த்தக கண்காணிப்பு அறிக்கையின் Q3 பதிப்பு- 2025

July 20 , 2025 7 days 50 0
  • நிதி ஆயோக் அமைப்பானது, புது டெல்லியில் காலாண்டு வர்த்தகக் கண்காணிப்பு அறிக்கையின் மூன்றாவது பதிப்பைத் வெளியிட்டுள்ளது என்ற நிலையில் இது 2024–25 ஆம் நிதியாண்டின் 3வது காலாண்டை (2024  ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை) உள்ளடக்கியது.
  • இந்தியாவின் சரக்கு ஏற்றுமதியானது சுமார் 3% அதிகரித்து 108.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், இறக்குமதியானது சுமார் 6.5% அதிகரித்து 187.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் உள்ளது.
  • சேவைகளின் ஏற்றுமதி 17% அதிகரித்து, 52.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சேவை உபரிக்குப் பங்களித்தது, இது வர்த்தகப் பற்றாக்குறையை ஈடுகட்ட உதவியது.
  • எண்ணிம முறையில் வழங்கப்படும் சேவைகளின் (DDS) ஏற்றுமதிகள் 2024 ஆம் ஆண்டில் 269 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியதுடன் இந்தப் பிரிவில் இந்தியா உலகளவில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது.
  • மின்சார இயந்திரங்கள் மற்றும் ஆயுதங்கள் போன்ற மிக அதி உயர் தொழில்நுட்பப் பொருட்களின் ஏற்றுமதியானது 2014 ஆம் ஆண்டு முதல் 10.6% கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் (CAGR) வளர்ந்துள்ளது.
  • விமானம், விண்கலம் மற்றும் அது தொடர்புடைய பாகங்கள் ஆண்டிற்கு சுமார் 200 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியுடன் முதல் பத்து ஏற்றுமதி செய்யும்  நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்