கால்நடை இரத்தமாற்றம் மற்றும் இரத்த வங்கிகளுக்கான வழிகாட்டுதல்கள்
August 29 , 2025 26 days 44 0
இந்தியாவில் விலங்குகளுக்கான இரத்தமாற்றம் மற்றும் இரத்த வங்கிகளுக்கானப் புதிய வழிகாட்டுதல்களை கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை வெளியிட்டுள்ளது.
உயிரிப் பாதுகாப்புத் தரநிலைகளுடன் மாநில அரசினால் ஒழுங்குபடுத்தப்பட்ட கால் நடை இரத்த வங்கிகளை நிறுவுவதை இந்த வழிகாட்டுதல்கள் கட்டாயமாக்குகின்றன.
இரத்தமாற்றத்தின் போது இணக்கமின்மையைத் தடுப்பதற்காக என கட்டாய இரத்த வகை மற்றும் இரத்த வகை பொருத்தம் அவசியமாக்கப்பட்டுள்ளது.
வயது, எடை, தடுப்பூசி வழங்கப்பட்ட நிலை, நோய்ப் பரிசோதனை மற்றும் கொடையாளி நிலையில் உள்ள இடைவெளிகளின் அடிப்படையில் கொடையாளி விலங்கின் தகுதி அளவுருக்கள் இந்த வழிகாட்டுதல்களில் வழங்கப்பட்டுள்ளன.
தன்னார்வ, சன்மானம் வழங்கப்படாத இரத்த தானம் மற்றும் தகவலறிந்த ஒப்புதலை இந்த நெறிமுறைக் கட்டமைப்பு வலியுறுத்துகிறது.
இரத்தமாற்றக் கண்காணிப்பு, பாதகமான எதிர்விளைவுகளை மேலாண்மை செய்தல் மற்றும் பதிவுகளை வைத்திருத்தல் ஆகியவற்றிற்கான நிலையான இயக்க நடைமுறைகள் இந்த வழிகாட்டுதல்களில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த வழிகாட்டுதல்கள் டிஜிட்டல் பதிவேடுகள் மற்றும் நிகழ்நேர இருப்பு மேலாண்மையுடன் கூடிய தேசிய கால்நடை இரத்த வங்கி வலையமைப்பை அறிமுகப் படுத்துகின்றன.
அவசர நிலைகள் மற்றும் அவசரப் பராமரிப்பில் விலங்குகளுக்கு பாதுகாப்பான, உயிர் காக்கும் வகையிலான இரத்தமாற்றங்களை வழங்குவதை இந்தக் கட்டமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.
விலங்குகளிடமிருந்து விலங்குகளுக்குப் பரவும் தொற்று அபாயங்களை மேலாண்மை செய்வதற்காக இந்த வழிகாட்டுதல்கள் ஒரு சுகாதாரக் கொள்கைகளை ஒருங்கிணைக்கின்றன.