கால்நடை நோய்களை கட்டுப்படுத்துவதற்கான புதிய முயற்சி
June 6 , 2019 2236 days 790 0
கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் கால் மற்றும் வாய் நோய் (Foot and Mouth Disease-FMD) மற்றும் புருசெல்லோசிஸ் (Brucellosis) ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்கான புதிய முயற்சிக்கு மத்திய அமைச்சரவையானது ஒப்புதல் அளித்துள்ளது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டில் கால்நடைகளில் பரவும் இந்த நோய் முழுவதையும் முற்றிலுமாககே கட்டுப்படுத்துவதையும் அதனைத் தொடர்ந்து இந்நோயை முற்றிலும் ஒழிப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
கால் மற்றும் வாய் நோய் (FMD) மற்றும் புருசெல்லோசிஸ்
இந்த நோய்களானது பசு, எருமைகள், செம்மறி, ஆடு மற்றும் பன்றி போன்ற கால்நடைகளில் பரவும் பொதுவான நோய்களாகும்.
பசு அல்லது எருமை இந்த FMD நோயால் பாதிக்கப்பட்டால் அதன் தாக்கம் நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை நீடிக்கும். இந்தத் தாக்கத்தினால் அதன் கறவை திறன் 100 சதவீதம் வரை குறையும்.
மேலும் புருசெல்லோசிஸ்ஸால் பாதிக்கப்படும் கால்நடைகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் 30 சதவீத அளவிற்கு கறவைத் திறனை இழக்கின்றன.
இந்நோயானது விலங்குகளிடையே மலட்டுத் தன்மைக்கு காரணமாகிறது.
இதன் தாக்கமானது பண்ணைத் தொழிலாளர்கள் மற்றும் கால்நடை உரிமையாளர்களுக்கும் பரவுகின்றது.