கால்நடை மற்றும் கோழி வளர்ப்புக்கு வேளாண்மை அந்தஸ்து
July 21 , 2025 14 days 69 0
கால்நடை வளர்ப்புக்கு வேளாண் அந்தஸ்து வழங்கிய முதல் இந்திய மாநிலம் மகாராஷ்டிரா ஆகும்.
இந்த முடிவின்படி, கால்நடை சார்ந்த நடவடிக்கைகள் தற்போது வேளாண்மைக்கு இணையாக நடத்தப்படும்.
இது விவசாயிகளுக்கு மின்சாரம், உள்ளாட்சி அமைப்பு வரி, கடன் மானியங்கள் மற்றும் வேளாண் விதிமுறைகளின் கீழ் சூரிய ஆற்றலுக்கான மானியம் ஆகியவற்றை அணுக அனுமதிக்கிறது.
இந்தியாவின் வேளாண் கொள்கைகள் மிகவும் பாரம்பரியமாக தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற பயிர் உற்பத்தியில் மட்டும் கவனம் செலுத்துகின்றன.
ஆனால் கால்நடை வளர்ப்பு ஒரு தனிப்பட்ட அல்லது "சார்பு நிலை" நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.