கால்பந்து விளையாட்டில் இந்தியாவின் அதிக கோல் அடித்தவர்
June 17 , 2018 2655 days 925 0
இந்திய கால்பந்து அணியின் தலைவரான சுனில் சேத்ரி (33 வயது) தற்சமயம் நடப்பில் விளையாடிக் கொண்டிருக்கும் அர்ஜென்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரரான லயோனல் மெஸ்ஸியுடன் இணைந்து இரண்டாவது அதிக சர்வதேச கோல் அடித்த வீரராக உருவெடுத்துள்ளார்.
இவர் மகாராஷ்டிராவின் மும்பையில் நடைபெற்ற இந்தியா மற்றும் கென்யாவிற்கு இடையேயான இன்டர்காண்டினென்டல் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் தனது 64வது கோலை அடித்து இப்பெருமையைப் பெற்றார்.
இந்த ஆட்டத்தில் சேத்ரி இரண்டு கோல்களை அடித்தார்.
முன்னாள் கேப்டன் பைச்சுங் பூட்டியாவிற்கு பிறகு 100 சர்வதேச ஆட்டங்களில் விளையாடிய இரண்டாவது இந்தியரான சுனில் சேத்ரியின் 102-வது சர்வதேச ஆட்டம் இதுவாகும்.
கோல்கள் அடித்ததன் அடிப்படையில், 150 ஆட்டங்களில் 81 கோல்களை அடித்த போர்ச்சுகலின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு அடுத்து இவரும் மெஸ்ஸியும் உள்ளனர்.
சேத்ரியும் மெஸ்ஸியும் தற்போது ஒட்டு மொத்தமாக அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் 21வது இடத்தை இணைந்து பகிர்ந்துள்ளனர்.