TNPSC Thervupettagam

காவல்துறை தொடர்பான குடிமக்களை மையமாகக் கொண்ட 2 சேவைகள் – NCRB

February 1 , 2020 1929 days 861 0
  • தேசிய குற்ற ஆவணக் காப்பகமானது (National Crime Record Bureau - NCRB) குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு அமைப்பு முறைத் தளங்கள் (Crime and Criminal Tracking Network System - CCTNS) மீதான காவல்துறை தொடர்பான குடிமக்களை மையமாகக் கொண்ட 2 சேவைகளைத் தொடங்கியுள்ளது. அவையாவன:
    • காணாமல் போன நபர்களைத் தேடுதல்,
    • வாகன NOCஐ (தடையில்லாச் சான்று) உருவாக்குதல்.

காணாமல் போன நபர்களைத் தேடுதல்:

  • குடிமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து அடையாளம் தெரியாத நபர் / அடையாளம் தெரியாத இறந்த உடல்களின் தேசிய தரவுத் தளத்தில் உள்ள தரவுகளின் உதவியுடன் காணாமல் போன உறவினர்களைத் தேட இது அனுமதிக்கின்றது.

வாகன NOCஐ (தடையில்லாச் சான்று) உருவாக்குதல்:

  • காவல்துறைப் பதிவுகளிலிருந்து சந்தேகத்திற்குரியதா அல்லது உண்மைத் தன்மையுடன் இருக்கிறதா என்று குடிமக்கள் ஒரு வாகனத்தை இரண்டாவது முறையாக வாங்குவதற்கு முன் அதன் நிலையை அறிய குடிமக்களை அனுமதிக்கின்றது.

CCTNS பற்றி

  • CCTNS என்பது 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும்.
  • இது உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்