தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA), தெலங்கானாவில் உள்ள காவல் புலிகள் காப்பகத்தை, புலிகளை மீட்டெடுப்பதற்கான ஒரு முன்னுரிமைத் தளமாக அடையாளம் கண்டுள்ளது.
தமக்கு ஏற்ற வறண்ட இலையுதிர் காடுகள் வாழ்விடத்தைக் கொண்டிருந்த போதிலும், தற்போது இங்கு நிரந்தரமாக வசிக்கும் இனப்பெருக்கப் புலிகளின் கூட்டம் இல்லை.
அகில இந்தியப் புலிகள் கணக்கெடுப்பில் (AITE), காவலில் நிரந்தரமாக வசிக்கும் புலி எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
காவல் புலிகள் காப்பகம், மத்திய இந்தியப் புலிகள் நிலப்பரப்பை, தடோபா-அந்தாரி (மகாராஷ்டிரா) மற்றும் இந்திராவதி (சத்தீஸ்கர்) காப்பகங்களுடன் இணைக்கிறது.
இது வடக்கு தெலங்கானாவில் கோதாவரி மற்றும் கடம் நதிப் படுகைகளின் ஓரத்தில் அமைந்து ள்ளது.
இந்தப் பரிந்துரையானது, NTCA மற்றும் இந்திய வனவிலங்கு நிறுவனம் இணைந்து வெளியிட்ட 'இந்தியாவில் புலிகளைத் தீவிரமாக நிர்வகிப்பதற்கான செயல் திட்டத்தின்' ஒரு பகுதியாகும்.
காவலில் வெப்பமண்டல வறண்ட இலையுதிர் காடுகள், தேக்கு மரங்கள் நிறைந்த வனப்பகுதிகள், மூங்கில் தோப்புகள் மற்றும் ஆற்றோர வாழ்விடங்கள் உள்ளன.
இது மத்திய இந்தியா மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள புலிகளின் கூட்டங்களுக்கு இடையில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது.