தமிழக அரசானது, காவிரி டெல்டா பகுதியில் உள்ள திருமுட்டம்/ஸ்ரீமுஷ்ணம் தாலுக்காவில் 38 வருவாய் கிராமங்களைச் சேர்த்துள்ளது.
இந்த கிராமங்கள் ஆனது முன்னதாக, தனி நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்ட காட்டுமன்னார்கோயில் தாலுக்காவின் ஒரு பகுதியாக இருந்தன.
இந்த விரிவாக்கம் முதன்முதலில் 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டது.
நீர்வளத் துறையின் அரசாணை (G.O.) ஆனது இந்த உள்ளடக்கத்தை உறுதிப்படுத்தி உள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம், தற்போது சிறந்த நிர்வாகம், நீர்ப்பாசன ஆதரவு மற்றும் மேம்பாட்டுத் திட்டமிடலுக்காக காவிரி டெல்டா பகுதியில் அதிக கிராமங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
இங்கு புதிதாக சேர்க்கப்பட்ட கிராமங்களில் ஆனந்தகுடி, கொக்கரசன் பேட்டை, மதகளிர்மாணிக்கம், ஸ்ரீசாத்தமங்கலம், குணமங்கலம் மற்றும் 32 கிராமங்கள் அடங்கும்.