காவிரி டெல்டா - பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம்
February 10 , 2020 2074 days 1156 0
காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அறிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த கால்நடைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி பூங்காவைத் திறந்து வைக்கும் நிகழ்வில் அவர் இதனை அறிவித்தார்.
இந்த அறிவிப்பானது மாநிலத்தின் அரிசிக் களஞ்சியமான காவிரி டெல்டா பகுதியில் எண்ணெய் ஆய்வு குறித்த திட்டங்களை செயல்படுத்துவதைத் தடுப்பதாகும்.
காவிரி டெல்டாப் பகுதியானது தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய தமிழ்நாட்டின் எட்டு மாவட்டங்களை உள்ளடக்கியதாகும்.