TNPSC Thervupettagam

காவிரி நதிநீர் இணைப்புத் திட்ட விவகாரம்

November 26 , 2026 2 days 67 0
  • காவிரி – தெற்கு வெள்ளாறு – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மேற்கொண்டு வரும் பணிகளுக்குத் தடை விதிக்கக் கோரி கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது.
  • தமிழ்நாட்டில் உள்ள தெற்கு வெள்ளாறு, வைகை மற்றும் குண்டாறு நதிப் படுகைகளுக்கு உபரி காவிரி நீரைத் திருப்பி விடுவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இத்திட்டத்தை மேற்கொள்வதற்கு முன்பு தமிழ்நாடு மத்திய அரசின் கொள்கை ரீதியான ஒப்புதலைப் பெற வேண்டும் என்று கர்நாடகா வாதிட்டது.
  • முதலாம் கட்டப் பணிகளில் சிலவற்றைத் தமிழ்நாடு ஏற்கனவே முடித்துவிட்டதாகக் குற்றம் சாட்டிய கர்நாடகா, மூன்று கட்டப் பணிகளுக்கும் தடை விதிக்கக் கோரியது.
  • உபரி காவிரி நீரைப் பயன்படுத்துவது மற்றும் கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் நீர் பங்கீட்டு உரிமைகள் தொடர்பானதாக இந்த விவகாரம் உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்